advertisement

முதல்வர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் போக்குவரத்து கட்டுப்பாடு

ஆக. 04, 2025 2:48 முற்பகல் |


முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தருவதை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை (04.08.2025) திறந்து வைக்க வருகை புரிவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக போக்குவரத்து  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  (04.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் தூத்துக்குடி விமான நிலைய பிரதான சாலையில் இருந்து, தூத்துக்குடி FCI ரவுண்டானா சந்திப்பு வரையிலும், FCI ரவுண்டானா சந்திப்பில் இருந்து மதுரை நோக்கி செல்லும் சாலையில் சிப்காட் பர்னிச்சர் பார்க் சந்திப்பு வரையிலும் உள்ள பிரதான சாலையிலும் மேலும் FCI  ரவுண்டனாக சந்திப்பில் இருந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து திருச்செந்தூர் சாலை, காமராஜ் கல்லூரி பிரதான சாலை வழியாக மாணிக்கம் மஹால் பகுதி வரை எந்த ஒரு கனரக (Heavy Vehicles) வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.

எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement