படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்!
ஆக. 04, 2025 11:57 முற்பகல் |
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், கவின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு கட்ட போராட்டங்கள் பேச்சு வார்தைக்கு பிறகு கவின் உடல் பெறப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவ கொலையால் உயிரிழந்த கவினின் பெற்றோர் சந்திரசேகருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக கவினின் உடல் தகனம் செய்யும் வரை திமுக எம்.பி. கனிமொழி உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்