advertisement

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

ஆக. 13, 2025 6:01 முற்பகல் |

 

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மண், மொழி, மானம் காக்க ஓரணியில் என்ற தளபதியின் ஆணைக்கினங்க இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன். தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக இணைந்துக் கொள்ள விரும்பி திமுகவில் இணைந்துள்ளேன். மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக இருக்கிறது.

அதிமுகவின் தற்போதைய போக்கு சரியாக இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிக்காமல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவிக்கிறார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார்; ஈபிஎஸ் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது. டெல்லி என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது.

நாளைக்கு ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால்கூட பாஜகவின் பங்கு எந்தளவிற்கு இருக்கும்.. மத்திய அரசின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு மக்கள் யோசிப்பார்கள். பல்வேறு நிர்வாகிகள் மன புழுக்கத்தில் இருக்கின்றனர். ஒருசிலர் நபர்கள் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். இவ்வாறு அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை; இதனாலே திமுகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement