திருநெல்வேலியில் இலவச கண் சிகிச்சை முகாம்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் திருநெல்வேலி மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், திருநெல்வேலி கிளைஉறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் அறுவை சிகிச்சை
மருத்துவரின் ஆலோசனை இன்று வண்ணார்பேட்டை வாசன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இரா. சீத்தாராமன் மாவட்ட துணைத்தலைவர் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் நல்லபெருமாள், மாவட்டச் செயலாளர் சங்கரநாராயணன் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தேவிகா குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்,முகாமில் சிறப்பு பரிசோதனைகள் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண் கண்ணாடி பரிசோதனை
தூர மற்றும் கிட்டத்து பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு கண்கண்ணாடிகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது, அதோடு கண்புரை நோய் கண்டறியப்பட்டு அதற்கான பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படட்டது, இம்முகாமில் ஓய்வூதியர்களும் குடும்ப ஓய்வூதியர்களும் கலந்து கொண்டனர்.முகாமில் மருத்துவர்கள் செந்தில் பிரசாத், சொக்கநாதன், சேது லட்சுமி, மேலாளர் பிரகாஷ் மற்றும் ரீகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்