advertisement

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம் - அமைச்சர்,ஆட்சியர் பங்கேற்பு

ஆக. 13, 2025 6:30 முற்பகல் |

வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் நடைபெற்ற முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் தமிழ்நாடு வனம், கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்றார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில்  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளிக்காட்சியின் மூலமாக துவக்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்ததையொட்டி, தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் பங்கேற்றார்கள்.

தொடர்ந்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் வயது முதிர்ந்தோர் , மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் வாகனத்தை தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன், வெண்ணீர்வாய்க்கால் ஊராட்சியில் பயன்பெறும் வகையில் பயனாளிகள் வீடுகளுக்கு சென்று தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உணவுப் பொருள்கள் வழங்கி தெரிவித்ததாவது :,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  " முதலமைச்சரின் தாயுமானவர் " திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் | மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகளிலிருந்து உணவுப் பொருட்கள் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதால் இத்திட்டம் அவர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 23,191 குடும்ப அட்டைகளில் 31,289 பயனாளிகள் இத்திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி , ஞாயிற்றுக்கிழமை தோறும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். பயனாளிகள் பயன்பெற்றிட வேண்டுமென தமிழ்நாடு வனம் , கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் , கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் ஜூனு , பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ஞா.சரவணபெருமாள் , கூட்டுறவு சங்க மண்டல துணைப்பதிவாளர் இராஜகுரு , மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் , முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோபிநாத் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட  அரசு அலுவலர்கள், கழகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement