நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி
ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சின்னத்திரை மற்றும் சினிமா நடிகர் ரோபோ சங்கர் படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 09.05 மணியளவில் உயிரிழந்தார்.ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் இல்லத்தில், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திரை பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன் ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கருத்துக்கள்