advertisement

செப். 25ல் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செப். 20, 2025 5:34 முற்பகல் |

 

செப் 25ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 24 ஆம் தேதி வாக்கில் வங்காள விரிகுடாவில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகி , செப்டம்பர் 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. இது செப்டம்பர் 26 ஆம் தேதி வாக்கில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இந்த அமைப்பு செப்டம்பர் 24 முதல் 26 வரை ஒடிசாவின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செப்டம்பர் 24 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement