advertisement

தொடர் சரிவில் தங்கம் விலை !

ஜூன் 11, 2026 6:00 முற்பகல் |

தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரையில் ஏற்ற-இறக்கத்துடன் நீடித்தது. அதன் பின்னர் இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை சந்திக்க தொடங்கியது.
 
 நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.
 
இந்நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,500-க்கும், சவரனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இது உலகளவில் தேவையை குறைத்து விலையையும் சரிய வைத்திருக்கிறது. நகை மீதான ஆர்வலர்களுக்கும், சுபகாரியங்களுக்காக நகை எடுக்க காத்திருப்பவர்களுக்கும் இந்த விலை வீழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.


வெள்ளியின் விலையில் இன்று மாற்றமின்றி நேற்றையவிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

11.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,08,000 (இன்று)

10.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,10,400 (நேற்று)

09.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

08.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,12,560

07.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

06.06.2026 - ஒரு சவரன் - ரூ.1,13,600

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement