advertisement

‘ஜனநாயகன்’ விவகாரம்: மூளையாக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது

ஜூன் 12, 2026 5:16 முற்பகல் |

 

‘ஜனநாயகன்’ திரைப்​படம் இணை​யதளத்​தில் சட்ட விரோத​மாக வெளி​யான விவ​காரத்​தில், மேலும் ஒரு​வரை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

‘ஜன​நாயகன்’ திரைப்​படம் திரையரங்​கு​களில் வெளி​யா​காத நிலை​யில், சட்ட விரோத​மாக இணை​யதளங்​களி​லும், சமூக வலை​தளங்​களி​லும் வெளி​யானது. இதுகுறித்​து, படத்​தின் தயாரிப்பு நிறு​வனம் மாநில சைபர் க்ரைம் காவல்​துறை​யில் புகார் அளித்தது.அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சினிமா உதவி எடிட்​டர், மென்​பொருள் பொறி​யாளர் உட்பட 18 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதில், தொடர்​புடைய சில முக்​கிய குற்​ற​வாளி​கள் மீதுகுண்​டர் சட்​ட​மும் பாய்ந்தது.இந்​நிலை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்​ற​வாளி​யும், மூளை​யாக செயல்​பட்​ட​வரு​மான மேலும் ஒரு​வரை சைபர் க்ரைம் போலீ​ஸார் தற்​போது கைது செய்​துள்​ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement