advertisement

சென்னைக்கு பைக்கில் கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது

செப். 03, 2026 5:59 முற்பகல் |


ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு பைக் மூலம் கஞ்சா கடத்தி வந்த3 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திரா-தமிழக எல்லைப் பகுதியிலிருந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை இலக்காகக் கொண்டு, பைக்கில் பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) சென்னை எல்லைகளில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய வகையில் பைக்கில் வந்த அருள்ராஜ், ராஜா, கார்த்திக் ஆகிய 3 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் வைத்திருந்த உடமைகளைச் சோதித்தபோது, 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கஞ்சாவைக் கடத்தி வந்த 3 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பைக், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement