advertisement

நித்திரவிளை அருகே கல்லுாரி மாணவர்கள் உலக சாதனை முயற்சி

செப். 04, 2026 6:13 முற்பகல் |

நித்திரவிளை அருகே கிராத்தூர் மார் கிறிஸோஸ்டம் கல்வியல் கல்லூரியில் 200 ற்கு  மேற்பட்டோர் இணைந்து மாபெரும் உலக சாதனை முயற்சி செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள கிராத்தூர் மார் கிறிஸோஸ்டம் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் ஹெய்ரா பைன் ஆர்ட் அகாடமி மாணவ மாணவியர் 200 ற்கு மேற்பட்டோர் இணைந்து அன்னை தெரசாவின் மிகப்பெரிய தொடர்ச்சியான மொசைக் உருவப்படத்தை 40 அடி உயரம் 40 அடி அகலத்தில் அன்னை தெரேசாவின் உருவ படத்தை சிறு சிறு சதுர அடி காகிதங்களில் நீர் வர்ணங்கள் மூலம் வரைந்து தொடர்ச்சியாக பதாகையின் மீது ஒட்டி இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு மாபெரும் உலக சாதனை படைத்தனர். 

இந்த உலக சாதனை முயற்சியின் நடுவராக ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் தீர்ப்பாளர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் கலந்து கொண்டு இந்த உலக சாதனை முயற்சியை ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ல் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதாக நேரில் அறிவித்து அதற்கான சான்றிதழை கல்வியியல் கல்லூரியின் தாளாளர் அருட்தந்தை சிஜி ஜோஸ் இடம் தீர்ப்பாளர் வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏஞ்சல் பெலிக்ஸ் கண்காணிப்பாளர் அருட் சகோதரி ஜெனிபா மேரி முனைவர் கிருஷ்ணகுமார் ஹெய்ரா பைன் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement