advertisement

தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

செப். 03, 2026 4:34 முற்பகல் |

 

முன்பதிவு செய்த இடத்தில் இறக்கி விடாமல் காேவில்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரைப் பாதியிலேயே இறக்கிவிட்டுச் சேவைக்குறைபாடு இழைத்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ. 2,10,135 அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியை சேர்ந்த ஜான் பிரேம்குமார் என்பவரது மகன் ரூபன் பால் (21). இவர் கோவையில்  பி.டெக்., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த 24.01.2026 அன்று கோவில்பட்டியில் இருந்து தனது கல்லூரி அமைந்துள்ள கோவை காருண்யா நகருக்குச் செல்வதற்காக, 'தனியார் ஆம்னி பேருந்தில் ரூ. 500 செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தார். அன்று இரவு 11:40 மணிக்குக் கோவில்பட்டியில் இருந்து அப்பேருந்தில் கோவைக்குப் புறப்பட்டார்.

மறுநாள் காலை கோவை சென்றடைந்ததும், மாணவர் முன்பதிவு செய்த இடமான காருண்யா நகரில் இறக்கிவிடாமல், அதற்கு முன்பாகவே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் அவரை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களிடம் இதுகுறித்துக் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, மாணவர் ஆட்டோ பிடித்துப் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து மூலமாகவே கல்லூரிக்குச் சென்றடைந்தார்.

இதுகுறித்து மாணவரின் தந்தை ஜான் பிரேம்குமார் ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்களும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் முத்துசாமி மற்றும் கௌதம் ஆகியோர் வாதாடினர். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத்,  தீர்ப்பை வழங்கினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement