வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி ஆலய கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே பிரசித்தி பெற்ற திருவிருத்தான்புள்ளி - வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருத்தாங்கல் ஆவணி பெருந்திருவிழா ஆண்டு தோறும் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வரிசையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கான திருநாமக் கொடியேற்றம் இன்று (04.09.26)துவங்கி வரும் (14. 09.26) வரை 11 நாட்கள் திருவிழா நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை மற்றும் தர்மமும், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பும், தர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையும் நடைபெறும்.11 ம் தேதி 8 ம் நாள் திருவிழாவில் அய்யா கருட வாகனத்திலும், 12 ம் தேதி 9 ம் நாள் திருவிழாவில் அய்யா குதிரை வாகனத்திலும், 13 ம் தேதி 10 ம் நாள் திருவிழாவில் அய்யா ஹனுமான் வாகனத்தில் பவனி வந்து சுற்று வட்டார பகுதிகளில் சுருள் பெற்றுச் செல்லும் நிகழ்வும் நடைபெறுகிறது. திரு விழாவின் சிகர நிகழ்ச்சியன 14 ம் தேதி அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலும், வாகன பவனியை தொடர்ந்து அய்யாவை நாகத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டுதல் நிகழ்வும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 15 ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை அய்யாவுக்கு பணிவிடை முடிந்ததும் காலை 5 மணிக்கு திருநாமக்கொடி இறக்கி திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா நாட்களில் 11 நாட்களும் அன்னதர்மம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.





கருத்துக்கள்