தூத்துக்குடியில் 3 ரவுடிகள் குண்டாசில் கைது
செப். 04, 2026 6:07 முற்பகல் |
தூத்துக்குடியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவித்து வந்த வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளான 3 நபர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நியூ முனியசாமிபுரம், தாளமுத்துநகர் மாரிமுத்து மகன் ஜீவா (20), அம்பேத்கர் நகர் 1-வது தெரு, சேகர் மகன் சந்திரன் (23), அம்பேத்கர் நகர் சந்தனராஜ் என்ற பம்பு (25) ஆகிய 3பேரையும் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.





கருத்துக்கள்