தூத்துக்குடி- மேலூர் ஆதிபராசக்தி சக்திபீடம் சார்பில் 1008 கஞ்சி கலயம்
தூத்துக்குடி அருள்மிகு மேலூர் ஆதிபராசக்தி சக்திபீடம் சார்பில் 1008 கஞ்சி கலயம்இ தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி அருள்மிகு மேலூர் ஆதிபராசக்தி சக்திபீடம் சார்பில் ஆடிப்பூர பெருவிழா நடைபெற்றது.அதிகாலையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மகளிர் 108இ 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து மழைவளம் வேண்டியும்இ விவசாயம் வளம்பெறவும்இ உப்பளம் தொழில் சிறக்கவும்இ அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் அன்னையிடம் வேண்டி மாபெரும் 1008 கஞ்சிக்கலயம்இ 101 அக்கினிசட்டி ஏந்தி ஆன்மிக ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மேலூர் சக்திபீடத்தலைவர் எம்.முத்துக்குமார் மற்றும் மகளிர் அணி உமாமகேஷ்வரிஇ சரஸ்வதி மீனாட்சி ஆகியோர் ஆன்மிக ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழரத வீதிஇ தெற்கு ரதவீதிஇ மேற்கு ரதவீதிஇ வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. அதன்பின் பக்தர்கள் ஆதிபராசக்தி அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேகம் மற்றும் வேள்வி பூஜை நடந்தது.
இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி சிவன் கோவில் அறங்காவலர் கே.கே.ஜி.இளங்குமரன் அவரது துணைவியார் சாந்திதேவி இளங்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வேள்வி பூஜையை பிருந்தாமாரிமுத்து மற்றும் சரஸ்வதி மருதநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து கே.கே.ஜி. அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கள்ளபிரான் மாரிமுத்துஇ அங்கு விஜயன்இ தில்லை இசக்கியம்மாள் செல்வபாண்டிஇ பாலுஇ சுப்பிரமணியன்இ சங்கரன்இ சுந்தரம்இ சரவணன்இ ஹரிஇ விஷ்வா உட்பட ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.





கருத்துக்கள்