சிவகங்கை அருகே கார் பைக் மோதிய விபத்து - 3 பேர் பலி
மே 05, 2025 3:04 முற்பகல் |
சிவகங்கை அருகே காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 3 பேர் பலியாகியுள்ளனர்.
மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி கார் ஒன்று சென்ற போது, பூவந்தியில் இருந்து மதுரைக்கு பைக் ஒன்றில் 30 வயதுடைய பொன்ராஜ் என்பவர் தமது மனைவி பிரதிபா (27), குழந்தை அனுசியா (3) ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மதுரை - சிவகங்கை ரோட்டில் நாட்டார் மங்கலம் விலக்கு என்ற இடம் வந்த போது காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டிச் சென்ற பொன்ராஜ், மனைவி பிரதிபா, குழந்தை அனுசியா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
கருத்துக்கள்