advertisement

ராமநாதபுரத்தில் மாணவர் களுக்கு புதிய பாட நூல்கள் - கலெக்டர் வழங்கல்

ஜூன் 02, 2025 11:53 முற்பகல் |

ராமநாதபுரம் வள்ளல்பாரி துவக்கப் பள்ளியில் மாணவர் - மாணவியர்களுக்கு புதிய பாட நூல்கள், சீருடைகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் , பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு வழங்கி துவக்கி வைத்ததையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகராட்சி, வள்ளல்பாரி துவக்கப்பள்ளியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாணவர், மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் ,பிற கல்வி உபகரணங்கள் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் 138 அரசு பள்ளிகள் , 49 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள், புவியியல் வரைபங்கள், கணித உபகரணப்பெட்டிகள், புத்தகப்பைகள், காலுறைகள், காலணிகள் ஆகியவை மாணவர், மாணவியர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர்  ஆர்.பிரின்ஸ் ஆரோக்கியராஜ் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் , பள்ளி தலைமை ஆசிரிய பெருமக்கள், ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவர் - மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement