advertisement

ஜூன் 13 ல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஜூன் 06, 2025 6:53 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 13 - ந் தேதி நடைபெறுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தகவல் தெரிவித்துள்ளார் .

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் மாதம் 13.06. 2025. (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 03.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை கேட்பு கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவர் மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்குரிய தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ் வாய்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement