advertisement

மண்டபம் அரசு பெண்கள் பள்ளியில் " நலம் காக்கும் ஸ்டாலின் " திட்டம் துவக்கம்

ஆக. 02, 2025 11:22 முற்பகல் |

மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் " நலம் காக்கும் ஸ்டாலின் " துவங்கப்பட்டதையடுத்து மருத்துவ முகாமில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், எம்.எல்.ஏக்கள் மருத்துவ அரங்குகளை பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர்  சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் , மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் "நலம் காக்கும் எஸ்டாலின்" திட்டத்தை துவக்கி வைத்ததையொட்டி , ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 
      முகாமில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம்  ஆகியோர் பங்கேற்று "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமில் மருத்துவ அரங்குகளை பார்வையிட்டதுடன் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதன் விவரங்களை கேட்டறிந்தார்கள்.

"நலம் காக்கும் ஸ்டாலின்" எனும் திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கிற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15,000/- வரையிலும், அரசு மருத்துவமனைகளில் ரூ.4,000/- வரை செலவாகும். முழு உடற்பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இத்திட்டம் பொதுமக்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து தரப்படும் திட்டமாகும். இந்த திட்டத்தை பொறுத்த வரை பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மகப்பேறுயியல் , மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு , தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற இருக்கிறது.

மேலும் , இந்த முகாமில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டறிந்து அங்கேயே தேசிய ஊனமுற்றோர் அடையான அட்டை மற்றும் யூடீ/ ஐடீ உடனடியாக வழங்கப்படுகிறது. மேலும் புதிதாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு இணைவதற்குரிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் ஹெச்ஐஎம்எஸ்  3.0 மூலம் கணினி மையமாக்கப்பட்டு முகாமிலேயே மருத்துவ பரிசோதனை சான்றுகள்  மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.முகாம் 02 - ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் வரை ஒவ்வொரு வட்டார அலகிலும் சனிக்கிழமைதோறும் நடைபெறும். இம்முகாமில் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று தேவையான நபர்களுக்கு இம்முகாமிலே மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மருத்துவ பயனாளிகள் பரிசோதனை செய்துள்ளார்கள். இதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் மருத்துவ முகாமில் சிறியவர் முதல் பெரியவர் என பொதுமக்கள் முழு அளிவில் பங்கேற்று முழு உடல் பரிசோதனை செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், இம்முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.

முகாமில் , மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அர்ஜுன்குமார் , இணை இயக்குநர் மரு.பிரகலாதன் , பரமக்குடி சுகாதார அலுவலர் மரு.லெட்சுமி நாராயணன் , துணை இயக்குநர் (குடும்ப நலம் ) மரு.சிவானந்தவள்ளி , மருத்துவ கண்காணிப்பாளர் மரு.ஜவஹர் , வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுரேந்திரன் , மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாலசுந்தரம் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார், மருத்துவர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement