advertisement

தேனி: நிகழ்ச்சி மேடையிலேயே திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆக. 02, 2025 10:19 முற்பகல் |

 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அம்மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சி மேடைக்கு வந்த திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. நடைமுறைபடி நாடாளுமன்ற உறுப்பினர் படம் இருக்க வேண்டும் என கூறி கலெக்டரிடம் அவர் கோபம் அடைந்தார்.

பின்பு நிகழ்ச்சி மேடையில் நலத்திட்ட உதவி வழங்கும்போது, நலத்திட்ட அட்டையை தங்க தமிழ்ச்செல்வன் கையில் இருந்து பிடுங்கி நான் தான் வழங்குவேன் என எம்.எல்.ஏ. மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மக்கள் முன்னிலையில் இருவரும் கனத்த குரலை எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கலெக்டர், காவல்துறையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ. மகாராஜனை சமாதானம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி விரைவிலே முடிக்கப்பட்டது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement