advertisement

கவின் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல்

ஆக. 02, 2025 7:21 முற்பகல் |

 


மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரின் மகனான கவின் செல்வகணேஷ் (27).படுகொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கவின் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று உறுதி அளித்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement