" முப்பது ஆண்டு கனவு நனவானது - எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் நன்றி !
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு மின்சாரம் செல்லும் பாதையானது வாகைக்குளத்தில் இருந்து புதுக்கோட்டை, கூட்டாம்புளி, பேய்குளம் பகுதி குளத்து வழியாக கடைசியாக இந்த பகுதிக்கு மின்சார வாரியத்தால் அளிக்கப்படுகிறது. மேற்படி வழித்தடத்தில் உயர் அழுத்த மின்சார கோளாறு ஏற்பட்டால் பல மணி நேரம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் மின் தடை ஏற்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக கடும் பாதிப்புள்ளாகி வந்தனர்.
இந்த நிலையை போக்கி புதுக்கோட்டை தேரி ஏர்போர்ட் சாலை வழியாக மாற்று வழி மின்தடபாதை அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி உபதலைவரும் மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளருமான ஏஞ்சலின் ஜெனிட்டா மத்திய ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி அவர்களிடம் கவனம் கொண்டு வந்து எம் ஊராட்சி மக்களின் 30 வருட கனவை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஜெயக்கொடி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விடம் வலியுறுத்தி இத்திட்டத்தை ஆய்வு செய்தனர். மேலும் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தொடர் கோரிக்கையாக இந்த பிரச்சனை சண்முகையா எம் எல் ஏ கவனம் கொண்டு செல்லப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் உடனடி நடவடிக்கை எடுத்து மின்வாரியத்தால் ஆய்வு செய்யபட்டு டெண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2024 ல் விடப்பட்டது. பின் பணி ஆரம்பிக்கப்பட்டது. மின்வாரிய டெண்டர் எடுத்தவர்கள் பணியை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த ஜுலை 15 ம்தேதி சேர்வைக்காரன்மடம் பெருந்தலைவர் காமராஜர் மன்ற இளைஞர்களால் நடத்த பட்ட விழாவில் பங்கேற்க சண்முகையா எம் எல் ஏ வந்த போது ஏஞ்சலின் ஜெனிட்டாவுடன் ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இதற்கு நன்றி தெரிவித்தும் கிடப்பில் உள்ள மேற்படி பணியை செய்து தரவேண்டும் என்றும் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பாரில் அநேக புதிய இணைப்பு வந்துள்ளது, ஆதலால் அதன் மின் பளுவை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள் .
உடனடி நடவடிக்கை எடுத்து இரண்டு நாட்களுக்குள் மாற்றுவழிதட பணி ஆரம்பிக்கப்பட்டும் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பளுவை குறைக்க பேய் குளம் தங்கம்மாள்புரம் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றுவழி தடம் முழுமையாக பணி முடிக்கப்பட்டுவிட்டது.
சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் மின்வாரியத்தின் மூலம் முன்னாள் உபதலைவர் முயற்சியால் சண்முகையா எம் எல் ஏ நடவடிக்கையால் சக்கம்மாள்புரம் பகுதியில் இரண்டு புதிய டிரான்ஸ்பார்மர் மற்றும் இரட்டை போல் மின்கம்பம் மாற்றம், தங்கம்மாள்புரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், காமராஜர் நகர் கிராமத்தில் உள்ள 3 தெருக்களில் தாழ்வாக சென்று பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததை கண்டறிந்து அந்த மூன்று தெருக்களின் நடுவில் புதிய 3 மின்கம்பங்கள், சிவஞானபுரம் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பகுதிகளில் ஆபத்தான பல மின்கம்பங்கள் அகற்றப்பட்டும் சப்பரம் செல்லும் வழியால் பல வருடங்களாக தாழ்வாக ஆபத்தாக சென்ற பகுதியில் கூடுதல் மின்கம்பம் மற்றும் செந்தியம்பலம் பகுதியில் வாதிரியார் சங்கம் மற்றும் பல்வேறு இடங்களில் கூடுதல் மின்கம்பம் மற்றும் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை போன்ற பணிகள் நடைபெற்றுள்ளது .
---
மக்கள் நன்றி:
“முப்பது ஆண்டுகளாக எங்களை வாட்டிய மின்தடைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் சண்முகையா எம்.எல்.ஏ. அவர்களே. ஆனால் இந்த பிரச்சனையை தொடர்ந்து முன்னிலைப்படுத்தி, திட்டம் நனவாகும் வரை குரலாகப் போராடியவர் முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா என்பதையும் மக்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள். சேர்வைக்காரன்மடம் மக்கள் இதயம் கனிந்த நன்றியை சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம் எல் ஏ வுக்கும் வலியுறுத்திய மத்திய திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் தொடர் முயற்சியெடுத்து சாதித்த முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா அவர்களுக்கும் தெரிவித்தனர் ".
கருத்துக்கள்