தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீதுர்க்கை ஆண்டு விழா பூஜை
தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை 54 வது ஆண்டு விழாவில் திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 54 வது ஆண்டு விழா நடைபெற்றது. ஆடி மாதம் 15 ம் தேதி இரவு 6.30 மணி முதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. 16ம் தேதி காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸ_க்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம், கும்பாபிஷேகம், நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற 216 திருவிளக்கு பூஜையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள், சன்னதியில் தரிசனம் செய்தார்.
கருத்துக்கள்