advertisement

தூத்துக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் : அமைச்சர்  துவக்கி வைப்பு

ஆக. 02, 2025 12:10 பிற்பகல் |

தூத்துக்குடியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து பார்வையிட்டார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை சாந்தோம் செயிண்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்.
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


இம்முகாமில் மேயர் பெ.ஜெகன், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.யாழினி (தூத்துக்குடி), மரு.வித்யா (கோவில்பட்டி), இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பிரியதர்ஷினி, துணை இயக்குநர்கள் மரு.பொன்ரவி (குடும்ப நலம்), மரு.சுந்தரலிங்கம் (காசநோய்), மரு.யமுனா (தொழு நோய்) உட்பட அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement