advertisement

திண்டுக்கல்லில் கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

ஆக. 02, 2025 11:13 முற்பகல் |

 

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இரண்டு சிறுமிகளின் உடல்கள் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையிரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கிணற்றில் இறந்து கிடந்த சிறுமிகளை மீட்ட தீயணைப்புத்துறையினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில், இறந்து கிடந்த சிறுமிகள் புதுப்பட்டியை சேர்ந்த சுந்தரமகாலிங்கம் - சுமதி இருவரின் மகள்கள் ஓச்சம்மாள்(11) மற்றும் தமிழ்செல்வி (10) என அடையாளம் காணப்பட்டனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது குளிக்க சென்றபோது தவறி விழுந்து சிறுமிகள் உயிரிழந்தார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement