மின்னல் தாக்கி தொழிலாளி பரிதாப உயிரிழப்பு
செப். 19, 2025 2:52 முற்பகல் |
மேலப்பெருங்கரை கிராமத்தில் மின்னல் தாக்கி கம்பி கட்டும் தொழிலாளி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனூரைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி ரமேஷ் (35) .இவர் மேலபெருங்கரை என்ற கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மழை பெய்ய துவங்கியது.இதனால், மழைக்கு புளிய மரத்தின் கீழே ஒதுங்கி நின்று உள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.இச் சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.அவரது மறைவு அறிந்து குடும்பத்தினர்கள், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்ததுடன், பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்
கருத்துக்கள்