தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு , சங்க மாநிலத் தலைவர் என்.ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் எம். விஜயகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கலிட்டனர் :
2023 - 2024, 2024 - 2025 -ம் ஆண்டிற்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலன் பாதுகாக்க தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் நல வாரியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.தனியார் பள்ளிகளை பாதுகாக்க , தனியார் பள்ளிகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும்.டிசி இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் அங்கீகாரம் பெற்று செயல்படக் கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். தினந்தோறும் பள்ளி விவரங்கள் கேட்பதை அரசு கைவிட வேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தற்போது படிக்கும் மாணவர்களின் நிலை என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும். நகர் ஊரமைப்பு துறை காரணம் காட்டி அங்கீகாரத்தை நிறுத்துக் கூடாது. பெற்றோர்களிடம் ஒரு முறை கடவுச் சொல் (ஓடிபி) கேட்பதை அரசு கைவிட வேண்டும். தேங்கியுள்ள அங்கீகாரம் புதுப்பித்தலை நான்கு சான்றிதழ்கள் இருந்தால் உடமையாக வழங்க வழி வகை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கலிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க மாநில பொதுச் செயலாளர் பூ.சதீஸ் , சங்க பொறுப்பாளர்கள் எழுச்சி உரையாற்றினார்கள்.கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.சங்க மாநில பொருளாளர் எம்.வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
கருத்துக்கள்