அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி
அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை , அறிவியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் 2025-2026ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் , கேடயம் வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் 2025-26ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 10-ஆம் வகுப்பில் 4-ம் இடமும், 12-ஆம் வகுப்பில் 8-ம் இடமும் பெற்றுள்ளது.
அதனையொட்டி , பள்ளிக் கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு , 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற 115 பள்ளி தலைமையாசிரிய பெருமக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டு சான்றிதழ் , கேடயம் வழங்கி பாராட்டி பேசியதாவது :
ராமநாதபுரம் மாவட்டம் வரும் கல்வி ஆண்டில் அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில் உங்களுடைய கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் பள்ளி மாணவர் -- மாணவியர்களின் வெற்றிக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென தலைமையாசிரிய பெருமக்கள் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்ததுடன், இந்த வெற்றிக்கு தூண்டுகோலாகவும், உறுதுணையாகவும் இருந்த முதன்மை கல்வி அலுவலர் , தலைமையாசிரிய பெருமக்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் கருணாநிதி , ராமநாதபுரம் முஹம்மது சதக் ஹமீது மகளிர் கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் மீரா மீனாட்சிசுந்தரம் , நேர்முக உதவியாளர்கள், உதவி திட்ட அலுவலர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், பள்ளி துணை ஆய்வாளர்கள் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட கல்வி துறையினர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்