வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் ஆட்சியர் நேரில் ஆய்வு .
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி , திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கமுதி வட்டம், செங்கொடிநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதைக்கான நிலம் அரசின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, செங்கொடிநகர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாதைக்கான ஆவணத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கியதுடன், கமுதி வட்டம், கமுதி குரூப் பகுதியில் தடையின்மைச் சான்று வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கமுதி வட்டத்திற்குட்பட்ட பெரிய உடப்பங்குளம், கோட்டைமேடு , நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், அய்யன்கோவில்பட்டி அருகில் நஞ்சை நிலத்தில் தடையின்மைச் சான்று வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், விளக்கனேந்தல் ஊராட்சி, கண்ணாதான் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்து, வீடுகளுக்கான குடிநீர் இணைப்பை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, விளக்கனேந்தல் ஊராட்சியில் 2025-26ஆம் ஆண்டிற்கான ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நர்சரி பண்ணையின் செயல்பாடுகள், பராமரிப்பு , வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், நர்சரி பண்ணையின் கூடுதலாக ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும் , முதுகுளத்தூர் வட்டம், அபிராமத்திலிருந்து விளக்கனேந்தல் வழியாகச் செல்லும் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து , கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி , குடிநீர் கட்டமைப்பு வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அலுவலர்களிடம் திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, பணிகளின் முன்னேற்றம் , பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், 273 ஓஹெச்டி-களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் , குடிநீர் விநியோக வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடித்து. பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர் , திருப்புல்லாணி ஊராட்சி, நல்லிருக்கை ஊராட்சி, செட்டியேந்தல் பகுதியில் நடைபெற்று வரும் கரூர் மாவட்டத்திலிருந்து வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இத்திட்டத்தின் கீழ், கரூர் மாவட்ட பகுதியில் இருந்து திருப்புல்லாணி ஒன்றியம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது உத்திரகோசமங்கையைக் கடந்து செட்டியேந்தல் பகுதி வரை நீர் வந்து சேர்ந்த நிலையில், செட்டியேந்தலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீரேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுகு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது , முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி , முருகானந்தவள்ளி , திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் , உதவிப் பொறியாளர் நந்தகிஷோர் , செய்தி- மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்