கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் நிகழ்ச்சி.
கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாளை முன்னிட்டு மருது சகோதரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் - செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கி, ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் குறித்து விளக்கமாக பேசியதாவது : இந்திய சுதந்திரப் போர் என. வரலாற்றில் குறிப்பிடப்படும் சிப்பாய் கலகத்துக்கு (1857ஆம் ஆண்டுக்கு) முன்பாகவே தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மருதுபாண்டியர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது.
1801-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத, பேதமின்றி அனைத்து மக்களையும், சிற்றரசர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதற்கும் விடுதலை வேண்டி திருச்சி மலைக்கோட்டை , ஸ்ரீரங்கம் கோயில் சுவர்களில் எழுத்துபூர்வமாக ஜம்புத்தீவு பிரகடன் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போர் பிரகடனத்தை வெளியிட்டனர். இந்தப் பிரகடனம் ஆங்கிலேயரிடத்தில் ஏற்படுத்திய அச்சத்தின் விளைவாகவே அதே ஆண்டில் அக்.24-ம் தேதி மருது சகோதரர்களையும், அவரது குடும்பத்தினர். உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரையும் தூக்கிலிட்டனர்.
ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிட்ட மருதுபாண்டியர்களுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், அடுத்து வரக்கூடிய இளம் தலைமுறையினர் இந்த வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவர் - மாணவியர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர். பிரகதீஸ்வரன், முனைவர் நாகராஜ், பேராசிரியை சுபாஷினி, பேராசிரியர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
.
கருத்துக்கள்