advertisement

ஈரோட்டில் ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை

ஆக. 07, 2025 9:48 முற்பகல் |

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அருகே கைகோல் பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையங்கிரி மகன் பொன் கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர் திருச்சி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்காக பொன் கார்த்திக், ரவி ஆனந்த் என்ற நண்பருடன் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்றுவிட்டு வந்தார். இந்த நிலையில் பொன் கார்த்திக் நேற்று வெகு நேரமாகியும் வேலைக்கு வரவில்லை. 

இதனால், அவருடன் வேலை பார்க்கும் நண்பர் அவரைத் தேடிச் சென்றப்போது அறையில் பொன் கார்த்திக் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், பொன் கார்த்திக் கடன் தொல்லையால் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, பொன் கார்த்திக்கு ஆன்லைனில் கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தக் கடன் தொகையை அவரால் திரும்பச் செலுத்த இயலவில்லை.இதனால் மனம் உடைந்து போன அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement