advertisement

திருநெல்வேலியில் கருணாநிதி உருவ படத்திற்கு மரியாதை

ஆக. 07, 2025 7:04 முற்பகல் |

நெல்லை மத்திய மாவட்ட திமுக 12வது வார்டு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு மாமன்ற உறுப்பினர் கோகுல வாணி சுரேஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் கவுன்சிலர் பொன் தங்கராஜ் வட்டபிரநிதி சுந்தர வேலன், முத்துக்குமார்,  பெட்டி கடை சங்கர், வேம்பு,விவேக் ,மாவட்ட பிரநிதி ராஜேந்திரன்,டிஜிட்டல் ஆப்ரேட்டர் செல்வகுமார் ,ரவி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 12 வது வட்ட செயலாளர் மேகை செல்வம் செய்திருந்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement