கூலி" படத்தில் என் கதாபாத்திரம் என்ன ?- நடிகை ஸ்ருதிஹாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ''கூலி'' படத்தில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், அமீர் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால் படத்தின் மீது இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், கூலி படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது, கூலி படத்தின் என் கதாபாத்திரம் கொல்லை செய்யப்படுமா?, நான் சண்டையிடுவேனா?, என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர். இந்த படத்தில் நான் சண்டையெல்லாம் போடவில்லை. ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜின் மகளாக நடித்துள்ளேன். இதன் படத்தின் கதையை கேட்டபோது, எனது கதாபாத்திரத்தை அதிகமான பெண்கள் தொடர்புப்படுத்தி கொள்ளும்படி இருக்குமென தோன்றியது. என்று கூறியுள்ளார்.
கருத்துக்கள்