கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
கன்னியாகுமரி திருவனந்தபுரம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு பஸ் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழ்நாடு பஸ் பயணிகள் நல சங்கத்தின் மாநில கமிட்டி கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. தமிழ்நாடு பஸ் பயணிகள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹலீல் றகுமான் தலைமை வகித்தார். லாசர் வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் நைனா முகமது அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் சதீஷ்குமார், சுரேஷ்குமார், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. கன்னியாகுமரி திருவனந்தபுரம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகளை பயணிகளின் நலன் கருதி விரைந்து முடிக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. நெல்லை மற்றும் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரம் போன்ற தகவல்களை பயணிகளின் நலன் கருதி ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்க அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தொலைதூரப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்க அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. களியக்காவிளையிலிருந்து நாகர்கோவில் நெல்லை தூத்துக்குடி வழியாக கீழக்கரை ஏர்வாடிக்கு பேருந்து இயக்க அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. களியக்காவிளையில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையும்போது மாணவர்கள் மற்றும் மக்களின் நலன்கருதி ஒரு அறையை நூலகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. தமிழ்நாடு அரசின் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் நலன் கருதி முதலுதவி சிகிச்சை பெட்டிகள் அமைக்க அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7. தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் ஒழுக்க நெறிகளை வலியுறுத்தும் நன்னெறி வாசகங்களை பொறிக்க வேண்டும் என்று அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது





கருத்துக்கள்