advertisement

நாகர்கோவில்-கோவில் நகைகள் செய்முறை பயிற்சி வகுப்பு

ஜூலை 18, 2025 4:33 முற்பகல் |

கோவில் நகைகள் செய்முறை பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்

நாகர்கோவில் வடசேரி யில் புகழ்பெற்ற கோவில் நகைகள் செய்முறை பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது இதில் நகர்ப்புற கிராமப்புற சுய உதவிக் குழு பெண் உறுப்பினர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர்  அழகு மீனா,  பயிற்சி பெறும் பெண்களை சந்தித்து  பாரம்பரிய நகைகள் பற்றிய சிறப்புகளையும் உலகளவில் அதன்  மதிப்புகளையும் பற்றி எடுத்துரைத்தார்  மேலும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக சில மாற்றங்கள் செய்து விற்பனை அதிகரிக்கும் விதமாக செயல் படுத்த ஆலோசனை வழங்கியும்  உங்களுக்கு பயிற்சி முடிந்த பிறகு தொழில் தொடங்க  அரசு எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கோவில் நகைத் தொழில் செய்முறை பயிற்சியாளர் நாகராஜனிடம் பயிற்சி முறைகள் பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement