மதுரை சித்திரை திருவிழா 2025 : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாள் எப்போது ?
மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்தரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மதுரையே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மதுரை மட்டுமின்றி அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த கலந்து கொள்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை அனைத்து மாதங்களும் திருவிழா மாதங்கள் என்றாலும் சித்திரை திருவிழா, வழக்கமான உற்சவங்கள், திருவிழாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா எப்போது துவங்க உள்ளது குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா 2025 அட்டவணை :
ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம்
மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 - கள்ளழகர் புறப்பாடு
மே 11 - கள்ளழகர் எதிர்சேவை
மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்
கருத்துக்கள்