நாமக்கல்லில் சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி: பிளஸ்-2 மாணவி தற்கொலை!
சிபிஎஸ்இ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் 2 கண்களை அவரது பெற்றோர் தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் சிறுமொளசியை அடுத்த வேட்டுவ பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவருடைய மகள் ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ,திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து சி.பி.எஸ்.இ. பிளஸ்-2,தோ்வு எழுதி இருந்தார்.
மேலும் மாணவி பஞ்சாப்பில் உள்ள ஒரு கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதி இருந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி வெளியான சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவில் மாணவி கணக்கு பாடப்பிரிவில் 3 மதிப்பெண்கள் குறைந்து தேர்ச்சி அடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து பெற்றோர் ரியாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டவரின் உடல் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் 2 கண்களை அவரது பெற்றோர் தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.





கருத்துக்கள்