புதுக்கோட்டையில் இருதரப்பினர்களுக்கு இடையே மோதல் - 14 பேர் கைது.!!
மே 06, 2025 3:25 முற்பகல் |
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாட்டில் கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வீடு, இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டதாகவும். 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அதுமட்டுமல்லாமல், அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மோதல் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, "பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தொடர்பாக இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





கருத்துக்கள்