advertisement

திருச்சி : சூப்பில் மருந்து கலந்து கணவரை கொன்ற மனைவி...! கள்ளக்காதலன் கைது!

செப். 20, 2025 6:20 முற்பகல் |

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிறுசோழன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் (43) விவசாயியும், பக்தர்களுக்கு அலகு குத்தும் பணியாளரும் ஆவார். இவரது மனைவி விஜயா (36), இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் குடும்பம் நடத்தி வந்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயி பாலு (35) உடன் குமாருக்கு தொழில்வழி பழக்கம் ஏற்பட்டது.

காலப்போக்கில், பாலு அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வரும்போது, விஜயாவுடன் நெருங்கிய தொடர்பு உருவாகி, அது கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து குமாருக்கும் சந்தேகம் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், அண்மையில் குமார் திடீரென உயிரிழந்தார்.

முதலில் வயிற்றுவலியால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், உறவினரின் சந்தேக புகாரின் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் குமார் கொலை செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.அந்த விசாரணையில், குமார் ரூ.15 லட்சம் கடன் சுமையால் மனஅழுத்தத்தில், மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

இதனால் விஜயா, கணவரை அகற்றிவிட்டு கள்ளக்காதலன் பாலுவுடன் வாழ திட்டமிட்டாராம். திட்டமிட்டபடி,தூக்க மாத்திரைகளை முருங்கை இலை சூப்பில் கலந்து கொடுத்தார். மயங்கி கிடந்த குமாரை, பாலு கழுத்து நெரித்து கொலை செய்தார்.இதைத் தொடர்ந்து,விஜயா, கணவர் வயிற்றுவலியால் இறந்ததாக நாடகம் ஆடினார்.

ஆனால் காவலர்கள் விசாரணையில் உண்மை வெளிப்பட்டதால் விஜயாவும், பாலுவும் கைது செய்யப்பட்டனர்.இறுதியில்,இந்தச் சம்பவத்தால், 3 சிறிய பிள்ளைகள் ஆதரவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement