advertisement

தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

மே 28, 2025 9:36 முற்பகல் |

 

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்றுள்ளது.

இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கே நகர்ந்து, புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென் இந்தியாவின் மேல் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தொடரும் எனவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, கொமாரின் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், நாவிகர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement