தூத்துக்குடியில் அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி மீளவிட்டான் என்.பொியசாமி விளையாட்டு திடலில் நடைபெற்றது.
போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பேசுகையில் பணி சுமை இல்லாமல் சிறப்பாக பணி செய்ய விளையாட்டு ஒரு முக்கியமான கருவி உடல் ஆரோக்கியம், எல்லோருக்கும் தேவை பொழுதுபோக்கு அம்சங்களில் இதுவும் ஓன்றாகும், எல்லா வகையிலும் மனமகிழ்ச்சி பெறக்கூடிய நிகழ்வில் கலந்து கொண்டு நான் பங்கேற்றதிலும் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பேசினாா். இந்த போட்டியில் நீதித்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி, நிதித்துறை, பள்ளிக்கல்வித்துறை அலுவலர், ஆசிரியர்கள், தமிழ்நாடு கிராம வங்கி, உள்பட அணியினர் பங்கு பெற்றுள்ளார்கள்.
போட்டிகளை ஆசிரியர்கள் செல்வின் அமீர்தராஜ், ரஞ்சித் குமார் உள்பட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்து நடத்தினர். பெனிட்டன் தொகுத்து வழங்கினார். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் சீருடை வழங்கினார்.நிகழ்ச்சியில் பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மணி, அல்பட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.





கருத்துக்கள்