கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேருக்கு தலா ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2014 ஆம் ஆண்டு குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வைத்து கொலை செய்து புதைத்த வழக்கில் முத்து கிருஷ்ணாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த தனராஜ் மகன் சோமு (எ) சோமசுந்தரம் (45/25) மற்றும் மாநாடு தைக்காவூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் அருண்குமார் (35/25) ஆகியோரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த கணம் பீரித்தா இன்று (04.07.2025) குற்றவாளிகளான சோமு (எ) சோமசுந்தரம் மற்றும் அருண்குமார் ஆகிய இருவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 6,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
கருத்துக்கள்