advertisement

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்!

செப். 19, 2025 3:47 முற்பகல் |

 


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி திரேஸ்புரம் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பிடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசாரைக் கண்டதும் கடத்த முயன்ற நபர்கள் படகுடன் தப்பி ஓடி விட்டார்கள். கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்ற பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் 40 இலட்சம் என போலீசார் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement