திருச்செந்தூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை
செப். 20, 2025 2:55 முற்பகல் |
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருச்செந்தூர் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(28/25) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் இன்று (19.09.2025) குற்றவாளி இசக்கிராஜா என்பவருக்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5000/- அபராதம் தீர்ப்பு வழங்கினார்.
கருத்துக்கள்