advertisement

மாப்பிள்ளையூரணியில் கபடி போட்டி

செப். 20, 2025 5:05 முற்பகல் |

மாப்பிள்ளையூரணியில் கபடி போட்டி வெற்றி பெற்ற அணிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கணேசபுரத்தில் பாலஅருண் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான கபாடி போட்டியில் முதல்பரிசை ஜெயசேகரன் முப்புலிவெட்டி அணியும், இரண்டாம் பரிசை அருண் பிரதர்ஸ் அணியும் மூன்றாம் பரிசை எம்எஸ்டி மாதாநகர் அணியும், நான்காம் பரிசை வெள்ளையன் கன்னியாகுமரி அணியும் தட்டி சென்றனர். 

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை மாப்பிள்ளையூரணி முன்னாள் ஊராட்;சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார், தொழிலதிபர்கள் பொன்முருகன், சிவக்குமார், வக்கீல் மால் முருகபாண்டியன், பால அருண், சங்கர்ராஜ், பழனி, ராஜேஸ்குமார், இராஜபூபதி உள்ளிட்ட பலர் வழங்கினார்கள்

விழாவில் மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளர் ராமசந்திரன், வழக்கறிஞர்கள் அர்ஜீன், கருப்பசாமி, கணேசபுரம் ஊர்தலைவர் இளங்கோ, மற்றும் நித்தியானந்தம், சந்தனராஜ், சந்தனசேகர், பேச்சிமுத்து, பூபதிராஜா, ஜெயகணேஷ், சண்முகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, போட்டிக்கான ஏற்பாடுகளை அருண்பிரதர்ஸ் கபாடி குழு மற்றும் இளைஞர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement