தூத்துக்குடி மாநகராட்சி 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது - மேயா் தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேயா் ஜெகன் பொியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையை தொடர்ந்து கொட்டும்மழையில் பாரதி நகர், முத்துகிருஷ்ணா நகர், ஆதிபராசக்தி நகர், பண்டாரம்பட்டி மச்சாது நகர் பகுதியிலுள்ள பாதாள சாக்கடையின் துணை கழிவுநீரேற்று நிலையத்தின் மூலமாகவும் மழைநீர் வெளியேற்றும் பணியினை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா் மேயா்ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகராட்சி அதிகாரிகளையும் அலுவலர்களையும் தொடர்ந்து இந்த பகுதியை கண்காணிக்கும் படியும் துணை கழிவுநீர் ஏற்றும் நிலையத்தில் உள்ள மின் மோட்டாரை தொடர்ந்து இயக்கும்படியும் கூறியுள்ளேன். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த கனமழையை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கவில்லை மேலும் புறநகர் பகுதியில் இருந்து வருகின்ற வெள்ளநீரும் மாநகருக்குள் வராமல் இருப்பதற்காக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகின்றது. 11 புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கடலுக்கு அந்த வழித்தடங்கள் மூலம் மழைநீர் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் முறையான பணிகள் செய்யாத காரணத்தால் 22 23 24ல் சில பாதிப்புகளை சந்தித்தோம். திமுக ஆட்சி அமைந்தபின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி மாநகராட்சி பகுதியில் உள்ள 60வார்டுகளிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை முறைப்படுத்தியுள்ளதால் சாதாரணமாக மழை பெய்தால் ரெகுலராக கடந்து விடும் சற்றுக்கனமழையாக இருந்தால் அதன் வேகம் குறைந்ததும் 3 மணி நேரத்திற்கு வழித்தடத்தில் சென்று விடுகின்றன பல இடங்களில் 30 40 நாட்கள் வரை கடந்த காலங்களில் தேங்கிய பகுதிகளில் இப்போது அந்த நிலை இல்லை தொடர்ந்து 24 மணி நேரமும் அதிகாாிகள் முதல் அலுவலா்கள் வரை எல்லா பகுதிகளிலும் கண்காணித்து வருகின்றனா்.
தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 16, 17, 18 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடைபெறுவதால் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றது பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் நான் ஆணையா் உள்ளிட்ட அதிகாாிகள் பணியாளா்கள் தொடா்ந்து ரோந்து பணியில் இருப்போம் எந்த குறைகளாக இருந்தாலும் மாநகராட்சிதொடா்பு எண்ணுக்கும் என்னுடை எண்ணுக்கும் தொடா்பு கொள்ளலாம் என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.
கருத்துக்கள்