மீண்டும் அதிகரித்த தங்கம் விலை
சாமானியர்களுக்கு கனவாக மாறியிருக்கிறது தங்கம். அந்த அளவிற்கு தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உச்சம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 97 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தீபாவளிக்குள் ஒரு லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும்விதமாக கடந்த இரண்டு நாட்களாக நகை விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்தது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் திடுக்கிடும் விதமாக மீண்டும் சவரனுக்கு ரூ. 2,080 அதிகரித்திருக்கிறது.நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ரூ.95,360க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.2,080 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 97,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த இரண்டு நாட்களாக மாறாமல் இருந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ.188க்கும், ஒரு கிலோ ரூ. 1,88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கருத்துக்கள்