advertisement

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அக். 21, 2025 5:55 முற்பகல் |

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் ஏற்கனவே பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், காவிரி படுக்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 33 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement