advertisement

கன்னியாகுமரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு

அக். 21, 2025 4:57 முற்பகல் |

காவலர்கள் வீரவணக்க நாள்  அனுசரிப்பு.  வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின்.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு  பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மதியழகன் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல்  கண்காணிப்பாளர் லலித் குமார்  தக்கலை உட்கோட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .நல்லசிவம், கன்னியாகுமரி உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன்,   DCRB காவல் துணை கண்காணிப்பாளர் பிச்சையா, SJ&HR காவல் துணை கண்காணிப்பாளர்  சிவசங்கரன்,   தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்  சாய்லட்சுமி,  ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருண்,  காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும்  காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement