advertisement

தீபாவளி முடிந்து ஊர் திரும்ப சிறப்பு ரயில்கள்

அக். 21, 2025 3:03 முற்பகல் |

 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில், மீண்டும் ஊர் திரும்ப தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 20, 2025 அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 1,000 கோடி ரூபாய் கூடுதலாக பட்டாசுகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நேற்று தீபாவளி முடிந்த நிலையில் மீண்டும் ஊர் திரும்ப பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். ஒரே நாளில் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால் கடும் நெருக்கடி ஏற்படும் என்பதை அறிந்து, இன்றைய தினம் (அக்டோபர் 21) பொது விடுமுறை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. எனவே நேற்று இரவு கொஞ்சம் பேர், இன்று இரவு கொஞ்சம் பேர், அடுத்து வரும் நாட்களில் கொஞ்சம் பேர் எனப் படிப்படியாக ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், 06166 / 06165 என்ற எண் கொண்ட திருநெல்வேலி – சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 22ஆம் தேதி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் 23ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 12.15 மணிக்கு திருநெல்வேலி போய் சேர்கிறது. இந்த ரயிலில் 1 ஏசி டூ டயர் பெட்டி, 2 ஏசி திரி டயர் பெட்டிகள், 9 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள், 2 லக்கேஜ் கம் பிரேக் வேன்கள் இடம்பெற்றுள்ளன.
காரைக்குடி - திருச்சி ரயில் பாதையில் மின்சார ரயில்!

திருநெல்வேலி – சென்னை சிறப்பு ரயிலானது இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதையடுத்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் கே.எஸ்.ஆர் பெங்களுரு – ஜோலார்பேட்டை – கே.எஸ்.ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement